ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கோட்டை மாரியம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேநேரம் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஆக., 8ல் பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




