பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தது எந்த மாநில அரசும் செய்யாதது: அமைச்சர் ரகுபதி

எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாததை தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை…

எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாததை தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அனைவரும் வியக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் எனக் கூறினார்.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் இருந்தும் பொதுமக்களுக்கு சொன்ன வற்றை செய்தாக வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என குறிப்பிட்டார். மேலும், எந்த ஒரு மாநில அரசும் செய்ய முடியாததை தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.