முக்கியச் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 55,000 கனடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் காவிலிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை 46வது நாளாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயிலும், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் பிரதாந அருவி, சினி ்ருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புக் கருதி பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நிறுவனத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor

ஜூலியன் அசாஞ்சேவை நாடுகடத்த இங்கிலாந்து அரசு அனுமதி

Mohan Dass

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!