பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி – ஆஸி.யை வீழ்த்திய இந்தியா!

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில்…

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்தது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.