காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “காலம் முழுவதும் மாநில உரிமைகளுக்காகப் போராடிய கட்சி திமுக. பாஜகவின் தேர்தல் திருட்டை தீவிரமாக எதிர்த்த கட்சி திமுக. இன்று தொகுதி மறுவரை என்ற பெயரில் ,
தென்மாநிலங்களை அரசியல் அநாதைகள் ஆக்கும்,பாஜகவை நிரந்தரமாகப் பதவியில் அமர்த்தும் இன்னொரு தேர்தல் திருட்டுக்கு துணைவது வரலாற்று முரண் மட்டுமல்ல வரலாற்றுப்பிழை.
தமிழ்நாட்டிற்கும்,தென் இந்தியாவிற்கும் மட்டுமல்ல இந்திய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்க்கும் ஒரு பேரழிவிற்கு துணைபோகிற ஒரு தவறை மாபெரும் தவறை செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாஜகவுடன் ஏதொவொருவகையில் கைகோர்த்த கட்சிகள் எல்லாம் காலஒட்டத்தில் காணாமல் போய்விட்டன என்பது வரலாறு இது திமுகவிற்குத் தெரியாதது அல்ல” இவ்வாறுய் அவர் தெரிவித்துள்ளார்.




