“சரியான நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம்!” – உதயநிதி ஸ்டாலின்

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையிலான எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதடவளிப்பதாக அறிவித்ததை அடுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கார்கே, மம்தா பானர்ஜி, சோனியாகாந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையிலான எந்த முடிவையும் திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்க மாட்டார். சரியான நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம், எந்த நிலையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

தொகுதி மறுவரையறை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முதலமைச்சர் மெளனம் காப்பதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு “அவர் என்றைக்காவது பேசியிருக்கிறாரா?” என்று பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.