பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் | வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத் – இந்தியாவுக்கு 6வது பதக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றாா். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செஹ்ராவத் மற்றும் பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் இருவரும் பலபரீட்சை நடத்தினர்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.