நடிகர் விஜய்-ன் `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் விஜய்-ன் `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இன்று (09.08.2024) வெளியாகியுள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. –…

நடிகர் விஜய்-ன் `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இன்று (09.08.2024) வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் கோட் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காரணம், இதுவரை கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே பெரிதாக ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.