பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் | இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு…

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது.  இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் கலந்துகொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை மனு பாக்கர் 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார்.  இதன் மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  முதல் இரண்டு இடங்களில் ஹங்கேரியின் வெரோனிகாவும், தென் கொரியாவின் யெ ஜிம்மும் உள்ளனர்.  நாளை மாலை 3.30 மணியளவில் மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.