பள்ளிகள் திறப்பால் பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: அன்பில் மகேஸ்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன்…

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் என்றும் பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம், அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைப் பள்ளிகள் செயல்படாத நிலையில், அந்த வகுப்பறைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 மாணவர்களே அமர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் தலைமை ஆசிரியர் அந்த மாண வருக்கு வேறு புதிய முக கவசம் ஒன்றை அளிக்க வேண்டும் என்றும் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.