முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாகக் குறைந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளா உட்பட சில மாநிலங்களில் தொற்று அதிகரித்திருப்பதால், அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 941 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றுப் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,560 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத் தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,275 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,59,680 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு தற்போது 3,70,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 64,05,28,644 பேருக்கு தடுப் பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு

Halley karthi

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?

Vandhana

“மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்” – சீமான்

Jeba Arul Robinson