பெற்றோர்கள் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது என அமைச்சர் மூர்த்தி மதுரையில் நடந்த நான் முதல்வன் திட்ட கருத்தரங்கில் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரையில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ்
கல்லூரிக் கனவு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு
நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்வில் வணிக வரி மற்றும்
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்,
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், உயர்க்கல்வி பயில்வதில் பெற்றோர்ளின் விருப்பதை மாணவர்களிடம் திணிக்க கூடாது. ஒரு மாணவனின் திறமை, தகுதியின் அடிப்படையிலேயே வளர்ச்சி பெற முடியும். சுந்தர் பிச்சை திறமையின் அடிப்படையில் மட்டுமே மிகப்பெரிய பொறுப்பை வகித்து வருகிறார். படிப்புடன் சேர்ந்து மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முதல்வர் பெண்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் 1000 ரூபாய்
நிதியுதவி அறிவித்துள்ளார். மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் முதல்வராக
நமது முதல்வர் செயல்பட்டு வருகிறார். கொரைனா பரவல் காலகட்டத்திலும் கூட
கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கல்லூரிக் காலம் என்பது மாணவர்களுக்கு
மிக முக்கியமானது. அரசியல்வாதிகள், கல்லூரிகளில் தான் உருவாகிறார்கள்,
அரசியல்துறை மிக எளிதான துறை அல்ல. மிக கடினமான துறையாக உள்ளது, ஒவ்வொரு
துறைகளிலும் 60 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர் என பேசினார்.
தொடர்ந்து பேசிய விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், மாணவர்களுக்கு பிடித்த
உயர்க்கல்வி படிப்பை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர்கள்
விருப்பத்திற்க்காக பிடிக்காத படிப்பை படிக்க வேண்டாம். மாணவர்கள் கேள்வி
கேட்க வேண்டும். கேள்வி கேட்டால் மட்டுமே பல விடைகள் கிடைக்கும் என பேசினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில், மாணவர்களுக்கு லட்சியம்
வேண்டும். சிறு வயதில் பைலட் ஆகி வானத்தில் பறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
தூய்மை பணியாளர் முதல் ஐ.ஏ.எஸ் வரை அனைத்து வேலைகளுக்கும் மரியாதை
உள்ளது. நமக்கான வேலையை முழு மனதுடன் செய்ய வேண்டும். மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் காலக்கட்டம் ஒரு மைல் கல்லாக உள்ளது. என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதை அனைவருரிடமும் ஆலோசனை கேட்கலாம். ஆனால் என்னபடிக்க வேண்டும் என்கிற முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டும் என பேசினார்.