குமரிமுனையில் கடலோர மீனவ பெண்கள் நடத்திய மீன் உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் உணவுகள் இடம்பெற்றன.
இதில் சீலா, விளை மீன், கணவாய், நண்டு, இறால், அயிலை, பாறை உட்பட
பல வகையான கடல் மீன்களால் சமைக்கப்பட்டன.
மீன் வறுவல், நண்டு பிரைட், நண்டு சில்லி, நண்டு கிரைவி, மீன் சுக்கா, சில்லி மீன்ஃப்ங்கர், மீன்ஃபால், நெத்திலி வெண்டைக்காய் உதிரி, கனவா பிரைட், ரைஸ்பாபி கியூப், திருக்கை தொக்கு, மீன் மஞ்சூரியன், மீன் பிரியாணி என நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான மீன் உணவுகள் பரிமாறபட்டது.
இந்த மீன் உணவு திருவிழாவில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் என வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மீன் உணவுகளை உண்டு ரசித்தார்கள்.
மேலும், இந்த மீன் உணவு திருவிழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் கடல் மீன்களால் சமைக்கப்பட்ட இந்த மீன் உணவு திருவிழாக்களை அடிக்கடி பல்வேறு
பகுதிகளில் நடத்த வேண்டும் என்றும் மீன் உணவு திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்
தெரிவித்தனர்.
—-ம.ஸ்ரீமரகதம்








