கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி! நிறுவன இயக்குநர் வீடு முற்றுகை!

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக வோல்ஸ்டாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் இல்லத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். வோல்ஸ்டாண்ட் என்ற தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம்…

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக வோல்ஸ்டாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் இல்லத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

வோல்ஸ்டாண்ட் என்ற தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 5 ஆயிரம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது‌. வோல்ஸ்டாண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடு செய்யும் தொழில் செய்து வருகிறார். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் பலமடங்கு பணம் கிடைக்கும் என கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளார். அதனை நம்பி இவரிடம் ஏராளமானவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பணத்தை கொடுத்து இழந்த ஒரு சிலர் கடந்த மாதம் சந்திரசேகரை கடத்தி தாக்கிய வழக்கு மதுரவாயல் காவல் நிலையத்தில் பதிவாகி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.