பஞ்சாப், உ.பி., யில் நடந்து முடிந்தது வாக்குபதிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், உத்திரப்பிரதேசத்தில் 3ம் கட்ட மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒரே…

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், உத்திரப்பிரதேசத்தில் 3ம் கட்ட மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்லலை சந்திக்கின்றன.

93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 63.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். உடல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், முதியோர்கள் உள்ளிட்ட ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

7 கட்டங்களாக நடைபெறும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில், 60 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் ஜஸ்வந்த்நகரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பாஜக-வை உத்தரப்பிரதேச விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் எனவும், இந்தத் தேர்தல் மூலம் பாஜக ஆட்சி முற்றுப்பெறும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.