போர் பதற்றம் காரணமாக அமீரகத்தில் இருந்து உக்ரைன், ரஷ்யா செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா நாடுகளின் எல்லைகளில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்யா சந்திக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
தற்போது ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், இதனால் உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை மீட்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்,அமீரகத்தில் இருந்து உக்ரைன்- ரஷ்யா செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது. இதில் அங்குள்ள நிலைமை கண்காணிக்கப்பட்டு சீரானவுடன் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கும் என அரசு வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.








