இந்தியாவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு?

இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என பாகிஸ்தான் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு…

இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என பாகிஸ்தான் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸ்மாயில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

 

மேலும் பாகிஸ்தான் மக்களின் தற்போதையை நிலைமையை சரி செய்ய இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியாவுடன் வர்த்தகம் என்று வாதிட்ட அமைச்சர்கள் வீட்டிற்கு சென்றுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதற்கு தான் பயப்படவில்லை என்றும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். பணவீக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தால், அது பரவாயில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்த தான் எவ்வளவு உழைக்கிறேன். இதனால் வேலையிலிருந்து தான் நீக்கப்படமாட்டேன் என்று நம்புகிறேன் என்றார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.