“நியூஸ் 7 தமிழ் Prime” யூடியூப் புதிய மைல்கல்!

நியூஸ் 7 தமிழ் பிரைம் யூடியூப் பக்கம் மிக குறுகிய காலத்தில் மக்களின் பேராதரவுடன் 10 லட்சம் (1 மில்லியன்) சப்ஸ்கிரைபர்ஸை எட்டி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.  நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சமூக…

நியூஸ் 7 தமிழ் பிரைம் யூடியூப் பக்கம் மிக குறுகிய காலத்தில் மக்களின் பேராதரவுடன் 10 லட்சம் (1 மில்லியன்) சப்ஸ்கிரைபர்ஸை எட்டி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சமூக அக்கறையுடன், பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்துடன், உண்மைச் செய்திகளை உடனுடக்குடன் கொடுக்கும் ஊடகமாக மட்டுமல்லாமல் மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஊடகமாகவும் விளங்கி வருகிறது. இது தொலைகாட்சி வாயிலாக மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் வாயிலாகவும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்து வருகிறது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலகிராம், ஷேர்சாட், யூடியூப், நியூஸ் 7 தமிழ் எக்ஸ்பிரஸ் ஆப் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் வாயிலாக செய்திகளை உடனுக்குடன் மக்களை சென்றடையும் வகையில் எளிமையான முறையில் வழங்கி வருகிறது. இதனால் இந்த சமூக வலைதளங்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல் அனைத்து மத ஆன்மீக தகவல்களையும், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக நியூஸ்7 தமிழ் பக்தி என்ற யூடியூப் பக்கமும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை குறித்த செய்திகளுக்கும், தகவல்களுக்கும் நியூஸ் 7 தமிழ் அக்ரி என்ற யூடியூப் பக்கமும், மாவட்ட வாரியாக செய்திகளை பிரித்து வழங்கும் நியூஸ் 7 தமிழ் டிஸ்டிரிக்ட் பக்கங்களும் உள்ளன. அண்மையில் மக்களின் பேராதரவோடு நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூடியூப் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் பிரைம் யூடியூப் சேனல் புதிய கோணத்தில், புதிய எண்ணத்தில், புதிய பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் தொடங்கிய மிக குறுகிய காலத்திலே மக்கள் இதற்கு அமோக ஆதரவளித்து 10 லட்சம் (1 மில்லியன்) சப்ஸ்கிரைபர்ஸூடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் மட்டுமல்லாது தொழில்நுட்பம், மருத்துவம், வைரலாகும் செய்திகள் என பல்வேறு சுவாரசிய தகவல்களை மக்களுக்கு அளித்து வருகிறது. நியூஸ் 7 தமிழ் பிரைம் யூடியூப் சேனலை தொடர்ந்து பின்பற்றும் மக்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.