10 கோடி பார்வைகளை கடந்த “பையா” திரைப்பட பாடல்…!

கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான “பையா” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “துளி துளி துளி மழையாய்” எனும் பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம்…

கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான “பையா” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “துளி துளி துளி மழையாய்” எனும் பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பையா’. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது. ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். பிருந்தாசாரதி வசனம் எழுதியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது. எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. வழக்கமான கதை தான் என்றாலும் இப்படம் போர் அடிக்காமல் ரசிக்கும்படி அமைந்திருந்தது தான் படத்தின் மிகப்பெரிய மந்திரம்.

இந்த படத்தில் வரும் ‘துளி துளி துளி மழையாய்’ எனும் பாடல் தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. நா.முத்துகுமாரின் வரிகளில் உருவான இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இந்தப் படத்தின் ஓஎஸ்டி (ஒரிஜினல் சவுண்ட் டிராக்) வேண்டுமென சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/dirlingusamy/status/1695269088216711304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1695269088216711304%7Ctwgr%5E30f6d7a67ddbdbd0b67a24538503d7be3e79cb0c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Faug%2F26%2Fpaiaya-song-lingusamy-lesichi-crosses-10-crore-viewers-4061874.html

இந்தப் பாடல் குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இது ஒரு சிறப்பான பாடல். அன்பிற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். பையா பட வெற்றிக்குப் பிறகு பையா 2 திரைப்படம் எடுக்க லிங்குசாமி ஆவலாக உள்ளார். இதற்காக ஆர்யா, ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.