மிகவும் அரிதான அந்தோணி வான் டிக் ஓவியத்தை வெறும் 600 டாலருக்கு வாங்கி, 3 மில்லியன் டாலர்களுக்கு விற்றபனை செய்துள்ளார் இதன் உரிமையாளர்.
பெல்ஜிய ஓவியரான டிக்கின் இந்த ஓவியம், Sotheby’s ஏலத்தில் 3.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தோணி வான் டிக் ஒரு ஃப்ளெமிஷ் பரோக் ஓவியர். அதாவது அவர் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானிஷ் கட்டுப்பாட்டின் போது தெற்கு நெதர்லாந்தில் ஓவியம் பல ஓவியாக்களை வரைந்து புகழ்பெற்றார்.
Poop-covered Anthony van Dyck painting found in NY shed sells for $3M https://t.co/hFGeRwtro4 pic.twitter.com/7AibGBGtyp
— New York Post (@nypost) January 30, 2023
வான் டிக் ஓவியம் ஒரு காலத்தில் நியூயார்க்கின் கிண்டர்ஹூக்கில் பறவைக் கழிவால் மூடப்பட்ட ஒரு பண்ணை கொட்டகையில் கைவிடப்படப்பட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியம், ஒரு நிர்வாண முதியவர் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கிறது. ஏல நிறுவனமான சோதேபியின் பட்டியலின் படி, வான் டிக் வரைந்த இரண்டு பெரிய ஓவியங்களில் இதுவும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. இது 1615 மற்றும் 1618 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
A study for "Saint Jerome" and the final painting by Anthony van Dyck#BitsofArt #AnthonyvanDyck #VanDyck #Baroque #Rubens #painting #painter #Antwerp #Sothebys #study #SaintJerome #Hieronymus pic.twitter.com/X5iydf62tE
— Ruben (@RubenStragier) January 30, 2023
அந்த ஓவியத்தைக் கண்டுபிடித்தவர், ஆல்பர்ட் பி ராபர்ட்ஸ் என்ற தனி நபர். பல துண்டுகளாகக் கிடந்த இந்த ஓவியத்தை ஆர்வத்துடன் சேகரித்து இருக்கிறார்.
ராபர்ட்ஸ் இந்த ஓவியத்தை வெறும் 600 டாலருக்கு வாங்கி கடந்த வாரம் நடைபெற்ற Sotheby’s ‘Master Paintings Part I’ விற்பனையின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு விற்பனை செய்துள்ளார். இதில் Agnolo Bronzino, Titian மற்றும் Melchior de Hondecoeter ஆகியோரின் படைப்புகளும் ஏலத்தில் விடப்ப்பட்டன்.