முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை அவையின் தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரது உரையைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, தேவைப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

அவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையை இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன், பின்னர் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விமர்சனம்: எப்படி இருக்கிறது பீஸ்ட்?

EZHILARASAN D

நல்ல நண்பரை இழந்துவிட்டேன் – சுதாகரின் மறைவிற்கு ரஜினிகாந்த் உருக்கம்

G SaravanaKumar

கருத்துக் கணிப்பு முடிவுகள்: கேரளாவில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Gayathri Venkatesan