2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்ம பூஷண் என்கிற உயரிய விருதால் கௌரவிக்கப்பட்டதற்காக தேசத்திற்கும், மக்களுக்கும், அரசிற்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.







