இந்திய குடியரசு தினம் ; சீன அதிபர் ஜி ஜின்பின் வாழ்த்து…..!

இந்தியாவின் 77 வது குடியரசுத் தினத்தையொட்டி சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இன்று 77வது குடியரசு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை இந்த நாள் நினைவுகூர்கிறது.

இதனையொட்டி இன்று காலை டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இதையொட்டி, அங்கு பிரம்மாண்ட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

அதே போல சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 77 வது குடியரசுத் தினத்தையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின்  குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய செய்தியில், கடந்த ஒரு வருடமாக, இரு நாடுகள் மற்றும் மக்களின் அடிப்படை நலன்களுக்கேற்ப சீன-இந்திய உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. உலக அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானது. நல்ல அண்டை நாடுகளாகவும், நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை ஆதரிக்கும் கூட்டாளிகளாகவும் இருப்பதும், டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடும் இலட்சியத்தை அடைவதும் இரு நாடுகளுக்கும் சரியான தேர்வாக சீனா எப்போதும் நம்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.