“லவ்னா பையனுக்கு பொண்ணு மேலயும், பொண்ணுக்கு பையனுக்கு பையன் மேலயும் வர்றதுதான் லவ்வா? ”
பா. ரஞ்சித் இயக்கியுள்ள முழுநீள காதல் திரைப்படமான நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை அடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திலிருந்து ரங்க ராட்டினம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரஞ்சித் இயக்கிய ‘தம்மம்’ ஆந்தாலஜி படத்திற்கு இசையமைத்த ‘தென்மா ’ இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ரங்க ராட்டினம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து புதிய ட்ரெய்லர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முழுக்க முழுக்க காதலையும் அதைச் சார்ந்த விஷயங்களைக் படம் பேசி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே உணர முடிகிறது. லவ்-னா பையனுக்கு பொண்ணு மேலயும், பொண்ணுக்கு பையனுக்கு பையன் மேலயும் வர்றது தான் லவ்-ஆ உள்ளிட்ட வசனங்கள், காதல் என்பது நிறம், மதம், இனம், பாலினம் என அனைத்தையும் கடந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.“காளிதாஸ் ஜெயராம்” இனியன் என்ற பெயரிலும், துஷாரா விஜயன் “ரெனே” என்ற பெயரிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கலையரசன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் இப்படத்திலும் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித்தின் இயக்கியுள்ள முழுநீள காதல் கதை என்பதால், திரை ரசிகர்கள் இப்படத்தைத் திரையில் காண ஆவலாக உள்ளனர்.