காதலே மிகப்பெரிய அரசியல் – பா ரஞ்சித்

தமிழ் சினிமாவின் கலகக்காரன் என அழைக்கப்படும் இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித்…

தமிழ் சினிமாவின் கலகக்காரன் என அழைக்கப்படும் இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த படைப்பான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தென்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. ஆனால் இதுவரை படத்தின் பெயரையோ அல்லது அதில் நடித்துள்ள நடிகர்கள் குறித்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. யாழினி ஃபிலிம்ஸ் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் Love is political என்ற வரிகளுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆணவக்கொலையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.