அஸ்ஸாமில் வெள்ளம்: தண்டவாளங்களில் வசித்துவரும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அஸ்ஸாமில் மழை வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான குடும்பங்கள் ரயில்வே தண்டவாளங்களில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ஸாமில் ஜமுனாமுக் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள…

அஸ்ஸாமில் மழை வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான குடும்பங்கள் ரயில்வே தண்டவாளங்களில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்ஸாமில் ஜமுனாமுக் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சங்ஜுரை மற்றும் பாடியா பதர் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், குடியருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரயில்வே தண்டவாளங்களில் தற்காலிகமாக தார்பாய் ஷீட்டுகள் அமைத்து தங்கியுள்ளனர்.

மாநில அரசிடம் இருந்து கடந்த 5 நாட்களாக எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கிராமத்தினர் தெரிவித்தனர். 29 மாவட்டங்களில் உள்ள 2,585 கிராமங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண படையினர் ஆகியோர் 86,772 பேரை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து வெளயேற்றி 343 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.