“மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது” – புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

ஹோலி பண்டிகையை ஒட்டி மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ‘ஹோலி’ பண்டிகையும் ஒன்று. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த பண்டிகை கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடுமுழுவதும் வருகிற 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹோலி பண்டிகையை ஒட்டி மார்ச் 14ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது எனவும் நோயாளிகள் வருவதை, தவிர்க்க வேண்டும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“மத்திய அரசு விடுமுறை தினமான 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் OPD பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் தேதியில் இயங்கும்” என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகளும், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சை நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.