முக்கியச் செய்திகள் சினிமா

“எங்கள் இலக்கு தமிழ்நாடு” வைரலாகும் இளையராஜா-ARரகுமான் வீடியோ

சென்னை விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜாவுடன், ஏ.ஆர்.ரகுமான் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் ரசிகர்களை தங்கள் இசையினால் கட்டி போட்டவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். 80களில் உள்ளவர்கள் முதல் இப்போது இருக்கும் 2k கிட்ஸ் வரை இசைஞானியின் இசைக்கு மயங்காதவர்கள் என யாரும் கிடையாது. அந்த அளவிற்கு தனது இசையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி போட்டவர் இசைஞானி இளையராஜா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்னொருபுறம் 90ஸ்களில் இசையில் புதுமையை புகுத்தி 90ஸ் கிட்களின் இதயங்களை வென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகனான விளங்கும் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றியவர்.

இந்நிலையில் ஏர்.ஆர்.ரகுமானின் குருவான இசைஞானியுடன் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹங்கேரி நாட்டில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜாவும், கனடாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் சென்னை விமான நிலையத்தில் சந்தித்து கொண்டனர். இதுகுறித்து ஏர்.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பி வருகிறோம். ஆனால் எப்போதுமே எங்கள் இலக்கு தமிழ்நாடு தான் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !

Halley Karthik

மத்திய அரசிடம் சில சாலைகளை ஒப்படைக்க உள்ளோம் – அமைச்சர்

EZHILARASAN D

கறுப்பின அமெரிக்க ராணுவ மருத்துவரை துப்பாக்கி முனையில் கைது செய்த காவலர்

Gayathri Venkatesan