முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ் அணி, விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது -ஜெயகுமார்

ஓபிஎஸ் அணி ஆட்கள் தேவையென்ற விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசினார். 

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு
சீர்கேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக அரசை கண்டித்தும்
அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு
ரீதியிலான 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 18
மாதங்களில் திமுக ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு
போன்றவற்றை உயர்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் வாழ
வழியில்லாத நிலை உள்ளது என்றார்.


ஓபிஎஸ் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியில் ஆட்கள் தேவை என விளம்பரம்
குடுக்கப்பட்டு, கம்பெனியின் நிர்வாகிகள் கூட்டம் தான். விலை மோரில் வெண்ணெய்
மற்றும் நெய் கடைந்தால் முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பாஜகவுடன் தோழமையுடன் தான்
இருந்து வருகிறோம். திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. பதவி மட்டுமே
முக்கியம், அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பாஜக தான் முடிவு செய்ய வேண்டும்.
அண்ணாமலையின் கை கடிகாரம் 5 லட்சம் ரூபாய் என தெளிவு படுத்தியுள்ளார். என்
வாட்ச் விலை 10 ஆயிரம் ரூபாய் தான். அதே போல அண்ணாமலையும் தெரிவித்துள்ளார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்
மனசாட்சியை தொட்டு அவர்களிடம் எத்தனை வாட்ச் உள்ளது என கூற வேண்டும்.
சட்டமன்றத்தில் தினமும் ஒரு வாட்ச் கட்டிக்கொண்டு வருவார்கள். அதன் விலை பல
லட்சம் ஆக உள்ளது. ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களாக உள்ளனர். இது உழைத்து
வாங்கியதா என கேள்வி எழுப்பிய ஜெயகுமார், முதலமைச்சர் அணியும் உடை, வாட்ச்
போன்றவற்றை கணக்கெடுத்தால் நடமாடும் வங்கியாக இருப்பார் என கூறினார்.

அம்மா உணவகம் ஏழைகளின் பசியை போக்க அமைக்கப்பட்ட ஒரு திட்டம், நட்டம்
ஏற்பட்டாலும் அதனை சரி கட்டி கடந்த ஆட்சியில் நடத்தினோம். ஆனால் அதனை கைவிட்டு அவரது அப்பாவின் பெயரில் கொண்டுவர முயற்சிக்கிறார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்தது, பாஜக வுடன் தோழமை நட்பு உள்ளது.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தோம், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால்நாடாளுமன்ற தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. அதற்கான பணிகளை அதிமுக துவங்கியது. அந்த நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். அதிமுக தலைமையை ஏற்று எந்த கட்சிகள் வருகிறதோ அந்த கட்சிகளுடன் கூட்டணி முடிவு செய்யப்படும்.

பரந்தூர் விமான நிலையம் அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டதாக இருந்தால்,
மக்கள் ஏன் அப்பொழுது போராடவில்லை. பரிந்துரையை திமுக நிராகரித்திருக்கலாம்.
கிராம மக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, 136 நாட்களாக மக்கள் போராடி
வருகின்றனர். இது குறித்து அரசுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர்
ஜெயகுமார் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிங்கப்பூர், நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் பேச இருப்பதாக அமைச்சர் தகவல்

EZHILARASAN D

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு குழு

G SaravanaKumar

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D