ஓபிஎஸ் தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95 வயது).கடந்த ஒரு சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார்
பழனியம்மாள் காலமானார்.

இதையடுத்து மறைந்த பழனியம்மாளுக்கு பொதுமக்களும், பல்வேறு கட்சி நிர்வாகிகளும்,
தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் பழனியம்மாளின் உடலை தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார். நேற்று இரவு பெரிய குளத்திற்கு வந்த சீமான், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.