எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பொதுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக என குற்றம்சாட்டினார்.
தற்போது கிராம சபை கூட்டம் என்னும் பெயரில் புத்தர், மகாத்மா காந்தி போல் ஸ்டாலின் நடிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஓ.பி.எஸ், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆவதை தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய சக்தியாக அதிமுக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகளாக மக்களின் வெறுப்பை பெறாத நல்லாட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது என்றும்
அதிமுக-வில் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கெல்லாம் பெருமை என்ற நிலையை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கி தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.







