நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் கொண்டு வரப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ,நீட் தேர்வு தொடர்பாக ஸ்டாலின் தான் பொய் சொல்கிறார் என குற்றம் சாட்டினார். எந்த துறைகளையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சாதனை புரிந்து பல விருதுகளை பெற்றிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் கோசாலைக்கு சென்று பசுக்களுக்கு உணவளித்தார்.







