அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
முன்னாள் துணை முதல்வர். ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலமானார். இவர் புற்று நோய்க்காகத் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் காலமானார். இவர் பன்னீர் செல்வத்தின் இரண்டாவது தம்பி. தற்போது முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இறுதி சடங்குகளுக்காகப் பெரியகுளம் சென்றுள்ளார்.







