முக்கியச் செய்திகள் தமிழகம்

நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த பேராலயத் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கொடியேற்றம், மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதனையொட்டி கோயில் வளாகத்தில், மாதா உருவம் குறித்த புனித கொடி ஊர்வலமும், தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை புனிதம் செய்து கொடிகம்பத்தில் ஏற்றி வைத்தார். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, குறைவான பக்தர்களுடன் எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement:
SHARE

Related posts

அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் மீது நடவடிக்கை; வெங்கையா நாயுடுவிடம் அமைச்சர்கள் கோரிக்கை

Saravana Kumar

அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!

Saravana

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

Saravana