ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி…

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

கேரள மாநிலத்தின் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மண்டல காலம் முடிந்து, அடுத்த ஒருவருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 18 மேல்சாந்திகளின் பெயர்களை வெள்ளி கோப்பையில் வைத்து பந்தளம் அரண்மனையில் இருந்து வரும் சிறுவரான கிருத்திகேஷ் வர்மா சபரிமலை மூலவர் கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் மற்றும் பொவுர்ணமி வர்மா (சிறுமி) மாளிகை புரம் தேவி கோவிலுக்குரிய மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து இருமுடி கட்டி கிருத்திகேஷ் வர்ம மற்றும் பொவுர்ணமி வர்மா ஆகியோர் புறப்பட்டனர்.

இதையடுத்து மன்னர் சித்திரை திருநாள் பிறந்த நாளை ஒட்டி 24ம் தேதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.