முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

டி20 உலக கோப்பையை முன்னிட்டு நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந் அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பின்ச் ஆகியோர் இறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 35 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 11 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 23 ரன்னுக்கும், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதற்கிடையில் பின்ச் அரைசதம் அடித்தார். நிலைத்து நின்று ஆடிய அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இபிஎஸ் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்’ – அமைச்சர் பெரியகருப்பன்

EZHILARASAN D

தமிழிசைக்கு உரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Arivazhagan Chinnasamy

வழிமாறி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் அஜித்குமார்!

Niruban Chakkaaravarthi