பட்டாசு வெடிக்கும் நேரக்கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும்; வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா கோரிக்கை

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு முழுமையாக அகற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு முழுமையாக அகற்ற வேண்டும் சீன…

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு முழுமையாக அகற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு முழுமையாக அகற்ற வேண்டும் சீன பட்டாசுகள் தடை செய்யப் பட்டு 100 சதவீத பசுமை பட்டாசுகள் விற்கப்பட்டு வருகிறது இதனால் 24 மணி நேரமும் பட்டாசு கடைகள் திறந்து வைக்கத் தமிழக முதலமைச்சரிடம் வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா கோரிக்கை.

தீபாவளி பண்டிகை வருகின்ற 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் உள்ள தீவு திடல் மையத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டாசு விற்பனை உரிமையாளர்கள்  சங்கம் சார்பில் 144 உரிமையாளர்கள் இணைந்து 47 பட்டாசு கடைகளை அமைத்துள்ளனர்.

இந்த பட்டாசுக் கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர் .பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பட்டாசுக்கடைகளைப் பார்வையிட்டார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜ பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் சீன பட்டாசுகள் தடை செய்யப்பட்டு 100 சதவீத பசுமை பட்டாசுகள் அனைத்து கடைகளிலும் விற்கப்பட்டு வருகிறது.மேலும் 24 மணி நேரமும் பட்டாசுக் கடைகளைத் திறந்து வைக்க தமிழக முதலமைச்சரிடம் வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா கோரிக்கை வைத்தார். அனைத்து பட்டாசுக் கடைகளுக்கும் லைசன்ஸ் உடனடியாக வழங்கியதற்கு டி ஜி பி சைலேந்திர பாபுவிற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளுக்கும் காவல் துறையினர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.