மகளிர் அணிக்கென தனி அலுவலகம் திறப்பு – தவெக புதிய முயற்சி!

சென்னையில் முதல் முதலில் தவெக மகளிர் அணிக்கென தனி அலுவலகம் வில்லிவாக்கம் பகுதியில் திறக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் முக்கிய முடிவுகள், முக்கிய ஆலோசனைகள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குதல்…

சென்னையில் முதல் முதலில் தவெக மகளிர் அணிக்கென தனி அலுவலகம் வில்லிவாக்கம் பகுதியில் திறக்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் முக்கிய முடிவுகள், முக்கிய ஆலோசனைகள்,
நிகழ்ச்சி ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குதல் போன்ற
பல்வேறு முடிவுகளை எடுக்க தவெக அலுவலகம் முதன்மையாக விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய தவெக கிளை மற்றும் மாவட்ட
தலைமை அலுவலகங்களில் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து முக்கிய
முடிவுகள் எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் தவெக மகளிர் அணிக்கென தனி கிளை மற்றும் தலைமை அலுவலகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் மகளிர்க்காக தனி ஒரு அலுவலகம் இல்லை. இந்நிலையில், மகளிர் அணிக்கென தனி அலுவலகம் இல்லாததால், தவெக மகளிர் அணி சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்க சிரமம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் தலைமையில் சென்னையில் முதல் முறையாக வில்லிவாக்கம் பகுதியில் மகளிர் அணி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த மகளிர் அணியின் அலுவலகம் திறப்பு விழாவை மத்திய சென்னை மாவட்ட தலைவர்
குமார் திறந்து வைத்தார். இந்த அலுவலக திறப்பு விழாவில்  மாவட்ட நிர்வாகிகள், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.