அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்கரஸ் வென்றார்.
கடந்த 1990ம் ஆண்டிற்கு பிறகு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை 19 வயதான கார்லஸ் அல்கரஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், முதல்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில், நார்வேயை சேர்ந்த காஸ்பர் ரூட் உடன் மோதிய அல்கரஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என கைப்பற்றி, 3-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். ஏற்கனவே நடப்பாண்டில் நடந்த மியாமி ஓபன் தொடரில் காஸ்பர் ரூட்டை வென்று பட்டம் பெற்றுள்ளார்.
இந்த வருடத்தின் மூன்றாவது முக்கிய பட்டம் மற்றும் மொத்தமாக 6 வது பட்டத்தையும் அல்கரஸ் வென்றுள்ளார். ஸ்பெயின் நட்சத்திரம் நடாலுக்கு பிறகு, இறுதிப் போட்டிக்கு நுழைந்த இரண்டாவது ஸ்பெயின் நட்சத்திரம் என்ற பெருமையும், நுழைந்த முதல் தொடரிலேயே பட்டம் வென்றவர் என்ற பெருமையும் கார்லஸ் அல்கரஸ் பெற்றுள்ளார்.







