முக்கியச் செய்திகள் தமிழகம் Instagram News

காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி; 2 டிகிரி செல்சியஸ்-க்கு கீழ் இறங்கிய வெப்பநிலை

பத்தாவது நாளாக உதகை தொடரும் உறை பனிப்பொழிவு காரணமாகக் குறைந்தபட்ச யாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி
வரை பனிக்காலம் காணப்படும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி
ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும், ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் பனிபொழிவு தாமதமாக ஜனவரி மாதத்தில் துவங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில்
கடுங்குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள
பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. உறைபனி
பொழிவு காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதனை சுற்றி உள்ள
பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு அரை அங்குலத்திற்கு மேல்
வெள்ளை கம்பளம் போல் காணப்பட்டது.


குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா , HPF, காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட
பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின்
மீது படிந்திருந்தது. இதனால் உதகையில் கடுங்குளிர் நிலவுகிறது.
தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.


கடுங்குளிர் காரணமாக அவலாஞ்சி பகுதியில் Oடிகிரி செல்சியஸ் கீழ் – 4 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியும், உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பத்தாவது
நாளாக O டிகிரி செல்சியஸ்சும், உதகை நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக
1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.


அவளாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் நிலவிய கடும் உறைப்பனி பொழிவு காரணமாக மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!

Jayapriya

தாய், மகள் வெட்டிபடுகொலை!

சீனாவில் ஊர் சுற்றும் யானைக் கூட்டம்: வைரல் புகைப்படங்கள்!

Gayathri Venkatesan