முக்கியச் செய்திகள் தமிழகம்

வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!

புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ.என்.வி குரூப் பெயரில் வழங்கப்படும் மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதான ஓ.என்.வி விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓ.என்.வி. குரூப் நினைவாக இந்த விருது கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் மலையாள இலக்கியத்தில் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி விருது கவிஞர் வைரமுத்துவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழி அல்லாத தமிழ் இலக்கியவாதிகள் ஒருவருக்கு ஓ.என்.வி. விருதை பெறும் முதல் கவிஞர் என்ற பெருமையை வைரமுத்து பெற்றுள்ளார்.

பொதுவாக ஞானபீட விருது பெறும் கவிஞர்களுக்கே ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்பட்டு வந்த சூழலில், வைரமுத்துவின் இலக்கிய சேவையைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான ‘கவிப்பேரரசு’ வைரமுத்து அவர்களின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவதுபோல அவருக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்வதாக கூறி உள்ளார்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையைக் கவிப்பேரரசு பெற்றதன் வாயிலாக, அன்னைத் தமிழுக்கும் அவர் சிறப்பு சேர்த்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துவதாகவும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதி வீட்டிற்கு சென்ற கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தான் வாங்கி ஓஎன்வி விருதை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சமர்ப்பிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் சூதாட்ட தடை: சட்டமுன் வடிவு நிறைவேறியது!

Niruban Chakkaaravarthi

பெற்றோர், சகோதரி, பாட்டி… குடும்பத்தினரை கொன்று புதைத்த கொடூர மகன்!

Vandhana

T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறது

Halley karthi