முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர்- முதலமைச்சர்

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனின் மகள் வழி பேத்தி தீப்தி திருமண விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இத்திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், இன்னொரு பக்கத்தில் திருமண மண்டபத்தில் (வானகரம்) என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை. தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோயுள்ளனர் என்றார்.

இத்தருணத்தில் மணமக்களை அனைவரின் சார்பாக வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன். இருக்கின்ற இடத்தில் விசுவாசமாக, நன்றியுணர்வுடன் பணியாற்றக்கூடியவர் கே கே எஸ் எஸ் ஆர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். என்னுடைய தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பெரிய மருது, சின்ன மருதாக கே கே எஸ் எஸ் ஆரும், தங்கம் தென்னரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதையும் முடியாது என சொல்லமாட்டார் கே கே எஸ் எஸ் ஆர். உடல் நலிவுற்று ஒய்வில் இருந்தாலும் எப்படியும் வரவேண்டும் என வந்துள்ளேன். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் காண ஆலோசனை கூட்டமும் தலைமைச்செயலகத்தில் உள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது ’மின்னல் முரளி’

Ezhilarasan

இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

பூஜ்ஜியத்தை தொட்ட கொரோனா உயிரிழப்பு

Saravana Kumar