10.30 மணிக்கு தொடங்க வேண்டிய பொதுக்குழு…

காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக செயற்குழு – பொதுக்குழு இன்னும் தொடங்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் வரவேற்பு காரணமாக மண்டபத்திற்கு அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில்…

காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக செயற்குழு – பொதுக்குழு இன்னும் தொடங்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் வரவேற்பு காரணமாக மண்டபத்திற்கு அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இருவருக்கும் ஒரே மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து விவாதிக்கப்படும்.” என கூறினார். மேலும், “நீதிமன்றம் வழிகாட்டுதல் படி பொதுக்குழு நடக்கும். அனைவரின் கருத்துக்களை கேட்கதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி 4.30 மணி நேரம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து இது குறித்து விவாதிக்கப்படும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்ததாவது, “எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலத்தில் மிக விரைவில் தொண்டர் விருப்பப்படி ஒற்றை தலைமை உருவாகும். ஒன்றரை கோடி தொடர்களின் இயக்கம் வெற்றி பாதையில் செல்ல எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நல்லபடியாக சுமூகமாக பொதுக்குழு நடைபெறும்” என்று கூறினார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்துள்ளார். ஓபிஎஸ் வருகையின்போது “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில், வந்திருக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரியாணி இந்த உணவு பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் உறுப்பினர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய செயற்குழு – பொதுக்குழு இன்னும் தொடங்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் வரவேற்பு காரணமாக மண்டபத்திற்கு அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் முன்னதாகவே மண்டபத்திற்கு வந்த நிலையில், மேடையில் அவரை அமர வைக்காமல் கீழேயே அமர வைக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வந்த பின்னர் இருவரும் இணைந்து ஒன்றாக மேடையில் ஏறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கட்சியின் பொருளாளரான இபிஎஸ் வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவுக்கும் இந்த பொதுக்குழுவுக்கும் இடையே கட்சிக்கு வந்த பணம் மற்றும், செலவீனங்கள் குறித்த கணக்கை ஓபிஎஸ் தாக்கல் செய்ய இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.