45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டியிலிருந்து 4 சதவீதம் மட்டுமே பேராசிரியர்கள் : மத்திய அரசு தகவல்

45 மத்திய பல்கலைக்கழகங்களில் நான்கு சதவீத பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித்…

45 மத்திய பல்கலைக்கழகங்களில் நான்கு சதவீத பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் பதிலளித்தார். அதில் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 6 சதவீத இணை பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களின் எண்ணிக்கை பட்டியலினத்தை சேர்ந்தவர்களை விட குறைவாகவே உள்ளது என்றும் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அளித்த புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேநேரத்தில் 85 சதவீத பேராசிரியர்கள் மற்றும் 82 சதவீ இணை பேராசிரியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஐந்து துணை வேந்தர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய கல்வித் துறை இணையமச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார். இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.