விமான பயணத்தின் போது துங்கிகொண்டிருந்த தோனியை, அந்த விமானத்தின் பணிப் பெண் ஒருவொருவர் வீடியோவாக எடுத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒருவருடைய அனுமதி இல்லாமல் இப்படி வீடியோ பதிவு செய்ததற்காக கடுமையான கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து திரைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கான ப்ரமோஷன் பணிகள் சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும், ஹைதராபாத்திலும் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக தனது மனைவி சாக்ஷியுடன் தோனி சென்னை வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து தன் மனைவியுடன் தோனி ராஞ்சிக்கு விமானத்தில் சென்ற சமயத்தில், அந்த பயணத்தின் போது அசந்து தூங்கியுள்ளார்.
அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஷாக்சி ஏதோ வைப் செய்துகொண்டிருந்த நேரத்தில், தோனி அசந்து தூங்கியபடி இருந்த நிகழ்வை அந்த விமானத்தில் பணிப் பெண்ணாக உள்ள ஒருவர் தனது மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். பிறகு அதை இணையத்தில் பகிர்ந்ததால் அந்த வீடியோ வைரலானாலும், ஒருவருடைய ப்ரைவஸிக்குள் நுழைவதற்கு யாருக்கும் உரிமையில்லை. குறிப்பாக தோனியின் அனுமதியில்லாமல் இப்படி வீடியோ பதிவு செய்தது தவறு என வசைப்பாடிய நெட்டிசன்கள், தற்போது அந்த விமான பணிப்பெண்ணுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1685171068909375488
- பி.ஜேம்ஸ் லிசா








