26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே லீவு | யார் இந்த கடின உழைப்பாளி?

பிஜ்னூரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தேஜ்பால் சிங்,  தனது 26 ஆண்டு கால வாழ்க்கையில்,  ஒரே ஒரு நாள் விடுப்பு மட்டுமே எடுத்துள்ளார்.  ஒவ்வொரு நாளும்,  ஒருவர் காலையில் எழுந்தவுடன், இ ன்று…

பிஜ்னூரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தேஜ்பால் சிங்,  தனது 26 ஆண்டு கால வாழ்க்கையில்,  ஒரே ஒரு நாள் விடுப்பு மட்டுமே எடுத்துள்ளார். 

ஒவ்வொரு நாளும்,  ஒருவர் காலையில் எழுந்தவுடன், இ ன்று மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டுமா? என்ற சலிப்புடனே நம்மில் பெரும்பாலானோர் மனதில் தோன்றும். எப்போடா… சனி, ஞாயிறு வரும் என்று காத்திருக்கிறோம்.  வார நாட்களில் எதை சொல்லி ஒருநாள் லீவு வாங்கலாம் என புது புது காரணம் தேடுகிறோம்.  பண்டிகைகள்,  அரசு விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.  ஏனெனில் அந்த நாட்களில் அலுவலகம் மற்றும் வேலையிலிருந்து விடுபட்டு எங்காவது நிம்மதியாக இருக்கலாம் என்பதற்காகவே.

ஒருபுறம்,  உலகம் முழுவதும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும், சில இடங்களில் இரண்டு நாட்களும், இப்போது அதை மூன்று நாட்களாக அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. சில நாடுகளில் 3 நாடுகள் அல்ல 4 நாட்கள் விடுமுறையும் வழங்கப்படுகிறது.  கார்ப்பரேட் உலகில் வாரத்திற்கு மூன்று விடுமுறைகள் பற்றி விவாதம் நடந்து வருகிறது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்:  இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த தேஜ்பால் சிங் தனது 26 ஆண்டுகால பணியில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை கூட அலுவலகம் செல்கிறார்.  இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றலாம்,  ஆனால் அது உண்மைதான்.  சிலர் பணியில் கூடுதல் பொறுப்பாக இருப்பவர்களைப் பார்த்து,  உங்களுக்கு என்ன விருதா தர போராங்க இப்படி உழைக்குரியேனு செல்வது உண்டு.  ஆனால் இவருக்கு உணையிலேயே அப்படி நிகழ்ந்துள்ளது.  ஆம் தேஜ்பால் சிங்கின் இந்த சாதனை “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்” பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 ஆண்டுகளில் ஒரே ஒரு விடுமுறை:

தேஜ்பால் சிங் பேட்டி ஒன்றில்,  கடந்த 26 ஆண்டுகால சேவையில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளேன் என்று கூறினார்.  அது எந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சரி,  விடுப்பு எடுப்பது பற்றி நான் நினைத்ததில்லை. நிறுவனத்தில் இருந்து ஒரு வருடத்தில் 45 லீவுகள் பெறுவதாகவும் ஆனால் ஒரே ஒரு விடுப்பு மட்டுமே எடுத்துள்ளதாகவும், சாதனைக்காக அதைச் செய்யவில்லை. என்று அவர் கூறினார்.

தேஜ்பால் சிங் யார்?

தேஜ்பால் சிங் டிசம்பர் 1995 இல் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார்.  நிறுவன விதிகளின்படி, தேஜ்பால் சிங்கிற்கு வாராந்திர மற்றும் திருவிழா விடுமுறைகள் உட்பட ஒரு வருடத்தில் தோராயமாக 45 விடுமுறைகள் கிடைக்கும்.  ஆனால் தற்போது வரை ஒரே ஒரு லீவு தான் எடுத்துள்ள அவர் ஜூன் 18, 2003 அன்று, அவரது இளைய சகோதரர் பிரதீப் குமாரின் திருமணத்திற்காக இந்த விடுப்பை எடுத்துள்ளார்.

தேஜ்பால் பெயரில் பதிவு செய்யப்பட்ட தனித்துவமான பதிவு:

தேஜ்பால் சிங் இந்த விடுப்பை எடுக்காத சாதனை ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேஜ்பால் சிங் கூட்டுக்குடும்பமாக தனது இளைய சகோதரர்களுடன் வசிக்கிறார்.  தேஜ்பாலுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.  தேஜ்பால் எப்போதுமே அலுவலகத்துக்கு நேரத்துக்கு செல்பவர்.  அதேபோல் வீட்டிற்கும் நேரத்துக்குச் சென்றுவிடுவார் என்கிறார்கள் தேஜ்பாலுடன் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.  அவர் ஒருபோதும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் விடுப்போ  அல்லது பர்மிஷனோ எடுப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/HasnaZaruriHai/status/1767881276084945053?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767881276084945053%7Ctwgr%5E7b7b0d93671afec9855c30a4cf51a7767f039cd6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Fviral%2Fnews%2Ftejpal-singh-of-bijnor-uttar-pradesh-made-a-record-of-taking-only-1-leave-in-26-years-2024-03-14-1030981

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.