சென்னை போரூரில் சுகி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை போரூரில் சுகி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிமைகளை மீட்கவும் மாபெரும் காலவரையற்ற வேலை
நிறுத்தம் நடைபெற்று வருகிறது .
தமிழ்நாடு முழுவதும் சுகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாத்திடவும் உரிமைகளை மீட்கவும் மாபெரும் வேலை நிறுத்தம் இன்று நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் சென்னை ஆற்காடு சாலை போரூர் சரவணா பவன் ஹோட்டல் எதிரே நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் இதர
பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
ராதாகிருஷ்ணா தலைமையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
சுகி ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளும் வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஊதிய முறை தொடர வேண்டும், சீனியர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் வழங்க வேண்டும், ஒரு ஆர்டருக்கு மினிமம் 30 ரூபாய் வழங்க வேண்டும்.
பேட்ச் ஆர்டர்க்கு ரூ 20 வழங்க வேண்டும் மற்றும் ஆர்டர்கள் சுகி ஊழியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றக்கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தமானது நடைபெற்று வருகிறது . மேலும் இந்த கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஊழியர்கள் சங்கம் சார்பாக கேட்டுக் கொண்டனர்.







