செய்திகள்

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு : ஆசிரியையின் அதிர்ச்சி தகவல்

பொதுவாக பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதன் நோக்கமே, அவர்கள் படித்து முடித்து சம்பாதித்து தன்னை காப்பாற்றுவார்கள் என்றோ அல்லது வேறு எந்த சுயலாபத்திற்காகவும் அனுப்புவதில்லை.

சமுதாயத்தில் ஒரு மனிதனாக, பொதுச்சமூகத்தை எவ்வாறு அணுகுவது, பக்குவ படவே அனுப்பபடுகிறார்கள்.தற்சமயம் கொரோனா காரணமாக பள்ளி செல்வது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் குழு பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.இதில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கூறிய பதில் திடுக் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.அவர் ஒரு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை.

மாணவர்களை ஒரு சில பெற்றோர்கள் தங்களது பணி(சுயத்தொழில்) அதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.சிலர் தங்களது பிள்ளைகளை பகுதி நேரமாக பணிக்கும் அனுப்புகிறார்கள் என்றார்.

மேலும் ஒரு நிகழ்வை கூறினார் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ள வாட்ஸ் அப் குழுவில் ஒரு மாணவன் நன்றாக படிக்கக்கூடியவன், ஒரு ஆபாச வீடியோவை அனுப்பிவிடுகிறான்.அந்த ஆசிரியை அந்த மாணவனுக்கு போன் செய்து உடனடியாக அதனை Delete For everyone கொடு என்று கூறுகிறார்.

பின் அவனை கண்டிக்கிறார் .அது மிகவும் அருவருக்கதக்க வீடியோ. வேறு ஒரு மாணவனை அழைத்து குரூப்பில் அனுப்பிய வீடியோவை நீ பார்த்தாயா என்று கேட்கிறார். அதற்கு அவனோ எந்த குரூப் என்று கேட்டுள்ளான். அப்போதுதான் அந்த ஆசிரியைக்கு தெரிகிறது. மாணவர்கள் நிறைய வாட்ஸ் அப் குரூப்புகளை ஆரம்பித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று மேலும் அந்த மாணவனுக்கு அவரது தந்தை கிடையாது.

தாய் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறார். அவரது தாய் பணிக்கு சென்றுவிடுவார். தங்கையை அவன்தான் பார்த்து கொள்வான் என்கிறார். விடலை பருவம் எதையும் செய்து பார்க்க துணியும் வயதுடைய அந்த மாணவனை நினைத்து அந்த ஆசிரியை வருத்தத்துடன் இந்த செய்தியை எங்களுக்கு தெரிவித்தார்.

பொதுவாக ஒருவர் சும்மாவே அதிக நேரம் இருந்தால் பலவற்றை சிந்திக்க தோன்றும்.பள்ளிக்கு மாணவன் செல்கும் போது வகுப்பறை, மைதானம், வீடு, டியுசன், சாப்பாடு, தூக்கம் என்று தன்னை Busy யாக வைத்து கொண்ட மாணவர்களுக்கு மொபைல் மூலம் பல தகவல்கள் வருகிறது. அவை பலவற்றை சிந்திக்கவும் நேரம் அதிகம் கிடைக்கிறது.

பெற்றோர்களும் 24மணி நேரமும் அலைபேசியை பார்த்து கொண்டே கண்காணிப்பது நடைமுறை சாத்தியமில்லை. விடலை பருவத்தில் தொற்றி கொள்ளும் பழக்கம் எளிதில் ஒருவரை விட்டு அகலாது என்பதுதான் நிதப்தமான உண்மை.

கொரோனா பரவல் இருந்தாலும் வரும் சந்ததியினர் தவறான போக்கில் செல்கிறார்கள் என்று வருத்தத்துடன் எங்களிடம் தெரிவித்தனர் பெருவாரியான ஆசிரிய பெருமக்கள்.வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பள்ளிகளை திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

Gayathri Venkatesan

அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை நிறுத்திக்கொண்ட ஐரோப்பிய நாடுகள்!

Halley Karthik

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

EZHILARASAN D

Leave a Reply