டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழு; அதிர்ச்சியடைந்த இளைஞர்!

உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் மளிகை கடையில் வாங்கிய டெய்ரி  மில்க் சாக்லேட்டில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த  நிலையில், இது குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே…

உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் மளிகை கடையில் வாங்கிய டெய்ரி  மில்க் சாக்லேட்டில் புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த  நிலையில், இது குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். உளுந்தூர்பேட்டையில் தங்கி வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் டைரி மில்க் சாக்லேட்டை வாங்கி பிரித்துள்ளார். அப்பொழுது அந்த  சாக்லேட்டில் அதிக அளவில் புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னா் சாக்லேட்டின் காலாவதி ஆகும் தேதியைப் பார்த்த பொழுது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இதற்கு என காலக்கெடு இருப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த அருண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

—கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.