திருவாரூர் அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ததாக இளைஞரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் ராஜகுமாரி என்பவரது வீட்டில் தங்கி பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா (18), திருச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் உறவினர் திருக்களார் கிராமத்தைச் சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கரன் (28) இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மோனிகாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் மோனிகாவை பெண் கேட்டதற்கு கொடுக்க மறுத்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் கோபத்தில், நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மோனிகாவை அம்மிக்கல்லை கொண்டுத் சிவசங்கரன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மோனிகா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவசங்கரனை அப்பகுதி மக்கள் பிடித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







